மன்னிப்பின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘மன்னிப்பு, நம் இதயங்களை சுதந்திரமானவைகளாக மாற்றி, நாம் புதிதாக துவங்க உதவுகிறது. மன்னிப்பு, நம்பிக்கையை வழங்குகிறது. மன்னிப்பு இல்லாமல் திருஅவை கட்டியெழுப்பப்பட முடியாது’ என உரைக்கிறது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி. மேலும், நம்பிக்கை பற்றி தன் ஞாயிறு டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘தன்னை இருளுக்குள் வைத்து பூட்டிக்கொள்ளாமல், கடந்த காலங்களிலேயே வாழ்ந்து கொண்டிராமல், நாளை என்பதை காணவல்ல இதயத்தின் நற்பண்பே, நம்பிக்கை’ என கூறியுள்ளார். மேலும், இஞ்ஞாயிறன்று, அருளாளர், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் இறந்ததன் 39ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஞாயிறு காலை தூய பேதுரு பேராலய அடிநில கல்லறைக்குச் சென்று, திருத்தந்தை 6ம் பவுலின் கல்லறையை தரிசித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-08-07 19:31:43]

Menu Title