யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தமது 2018ஆம் ஆண்டு தீபாவளி பெருவிழாச் செய்தியில் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் தமது செய்தியில் 2018ஆம் ஆண்டு ஒளியின் பெருவிழாவான தீபாவளி திருநாளைக் கொண்டாடும் வேளை இலங்கை நாடு இருண்டு பெரும் குழப்பத்தில் உள்ளது என்பது வேதனையானது. இந்த குழப்பமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் தம் தனிப்பட்ட வேறுபாடுகள் விருப்பு வெறுப்புக்களை விடுத்து – யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் – யார் அதிகாரத்தை இழக்கப்போகிறார்கள் என்பதிலோ அல்லது இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருளாதரர வளம் பெறலாமா – எமது கட்சியை வளப்படுத்தலாமா என்பதிலோ கவனம் செலுத்தாது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமென தமிழ் மக்கள் பெயரால் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

2018 ஆம் ஆண்டு ஒளியின் பெருவிழாவான தீபாவளி திருநாளைக் கொண்டாடும் இந்துசமய சகோதரர்கள் மற்றும் அனைவர்க்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம். இருளைப் பழிப்பதை விட ஒளியை எற்றுவதே சிறந்தது. ஒளியை எல்லோரும் விரும்புகிறார்கள். இருளைப் பார்த்து எல்லோரும் பயப்பிடுகிறார்கள். இருளுக்கும் ஒளிக்குமான போராட்டத்தில் ஒளியே வெல்ல வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் நன்மையே வெல்ல வேண்டும். இந்த ஒளியின் விழாவில் நாம் ஒளியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே அழைக்கப்படுகிறோம்.

வாழ்வில் நம்பிக்கை இன்றி இருப்போர் – எல்லாராலும் கைவிடப்பட்டு வீடுகளிலும் வயோதிப இல்லங்களிலும் தனிமையில் வாடுவோர் – வைத்திய சாலைகளிலும் வீடுகளிலும் வருத்தத்தில் இருப்போர் – சிறையிலும் தடுப்பு முகாம்களிலும் அல்லற்படுவோர் – அடுத்த நேர உணவு என்ன – யார் எமக்குத் துணை என ஏங்குவோர் – தாம் புரியப்படவில்லை தம் எண்ணங்கள் ஏற்கப்படவில்லை என ஏங்குவோர் இவர்களே இன்று இருளில் இருப்பவர்கள். இவர்களுடைய வாழ்வில் ஒரு தரிசிப்பால் – ஒரு அன்பான வார்த்தையால் – அமைதியான செவிமடுத்தலால் – ஒரு நம்பிக்கையூட்டும் செயலால் – ஒரு சிறிய அன்பளிப்பால் – ஒரு நேர உணவால் ஒளியைக்காட்ட முடியுமாயின் அதுவே நாம் கொண்டாடும் சிறந்த தீபாவளிப்பெருவிழாவாகும.; இருள் நிறைந்த துன்பமான வேதனை மிக்க வாழ்வை விடுத்து ஒளிமிகுந்த மகிழ்ச்சியான வாழ்வையே எல்லோரிற்கும் நாம் ஆசிக்கவேண்டும். இதையே நற்செய்தி ஏடுகள் நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீhகள்… உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க.(மத்தேயு 5:14 -16) என தெரிவிக்கின்றன. உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க என்ற வார்த்தைகளை நம்முடையதாக்குவோம்.

ஒளியின் பெருவிழாவான தீபாவளி கொண்டாடத்துடன் நாட்டில் அனைத்து குழப்பங்களும் சுமுகமாக தீர்ந்து அமைதியும் புரிந்துணர்வும் நல்லாட்சியும் தோன்ற வேண்டுமென்றே இறையாசீர் வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளாh.; [2018-11-07 15:59:12

Menu Title