புனித வார வழிபாட்டின் ஆரம்ப நாளானகுருத்தோலை ஞாயிறு வழிபாடு 14.04.2019அன்று Kent மாவட்டத்திலுள்ள The Frairs, Aylesford, ME 20 7BX என்ற இடத்தில் Southwark மறைமாவட்ட துணை ஆயர் அதி வணக்கத்துக்குரிய போல் கென்றிக் தலைமையில் நடைபெறும்.

இவ்வழிபாடுகள் காலை 11 மணிக்கு மனமாற்ற தியானத்துடன் ஆரம்பமாகி 12 மணிக்கு குருத்தோலைப் பவனியும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும், மதிய இடைவேளைக்குப்பின் திருச்சிலுவைப் பாதை பவனியும் நற்கருணை ஆசீரும் இடம்பெறும்.
அருள் பொழியும் இத்தவக்காலத்தில் இறைவனை மறந்து மறுத்து, அயலவரை வெறுத்து அவமதித்து வாழ்ந்த தருணங்களை எண்ணி பாவ மன்னிப்பை பெற்று இறைவனின் அன்பை பெற முயற்சி செய்வோம்.
மதிய போன இடைவேளையின் போது பாவசங்கீர்த்தனம்(confession) கேட்கப்படும்

Menu Title