இயேசு நாற்பதுநாள் கடுந்தவத்தை முடித்ததும், அவர் சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம், கல்லை, அப்பமாய் மாற்றச் சொன்னது, அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி, அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது, சாத்தான். தேவைகள் அதிகமாகும்போது, அந்தத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துவிடத் துடிக்கும்போது, குறுக்கு வழிகளைத் தேடும் சோதனைகள் அதிகமாகின்றன.நாம் இன்றைய உலகில் சந்திக்கும் பெரும் சோதனை, பார்க்கும் அனைத்தையும், பசிதீர்க்கும் அப்பமாக மாற்றும் சோதனை. தேவைக்கும் அதிகமாக பல்வேறு பசிகளைத் தூண்டும் ‘நுகர்வுக் கலாச்சாரம்’, காணும் அனைத்தையும், நுகர்வது மட்டும் போதாதென்று, விழுங்கவும் சொல்லித்தருகிறது. இந்த நச்சுக் கலாச்சாரத்திலிருந்து நம்மை மீட்கும் ஒரே வழி… இறைவார்த்தையை நம்பி வாழ்வது! சுயநலப் பசியைவிட, இன்னும் உன்னதமான உண்மைகள், உணர்வுகள், இவ்வுலகில் உள்ளன என்ற பாடத்தை, முதல் சோதனையை, தான் எதிர்கொண்ட முறை வழியே, நமக்குச் சொல்லித்தருகிறார் இயேசு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Menu Title