விசுவாச ஆண்டு
திருத்தந்தை 16ம் பெனடிக்ற் 2012 ஐப்பசி மாதம் 11ம் திகதி தொடக்கம் 2013 ஐப்பசி மாதம் 24ம்திகதி வரையிலான காலப்பகுதியை நம்பிக்கையின் (விசுவாச) ஆண்டாக அறிவித்துள்ளதோடு நம்பிக்கையின் வாயில் ( Porta Fidei )என்னும் திருத்தூது மடலையும் வெளியிட்டுள்ளார்.
விசுவாச ஆண்டிற்கான செபம்
விண்ணுலக தந்தையே! இந்த விசுவாச ஆண்டில் எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும்! ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவே எங்கள் விசுவாசத்தை மிகுதியாக்கும்! தூய ஆவியாரே எங்கள் விசுவாசத்தை உயிருள்ளதாக்கும். மூவொரு இறைவா! இந்த விசுவாச ஆண்டில், நாங்கள் எல்லோரும் எங்கள் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், உலகிற்கு உப்பாக, ஒளியாக வாழ்ந்து, சிறந்த நற்செய்தியாளர்களாகத் திகழ விரும்புகின்றோம். தொடக்ககாலக் கிறிஸ்தவர்களைப் போன்று வாழ்ந்து, கிறிஸ்துவின் அன்பிற்கும், ஆற்றலுக்கும், சான்று பகரவும், நீதியும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த புதிய உலகம் ஒன்றை உருவாக்கவும் ஆசைப்படுகின்றோம். எங்கள் எண்ணங்கள் ஈடேற, எங்களை ஆசீர்வதியும். இந்த விசுவாச ஆண்டில், இயேசுவை! அதிகமாய் அறியவும், அனுபவிக்கவும், அறிவிக்கவும் அன்னை மரியாவின் பரிந்து பேசுதல் எங்களுக்குத் துணை நிற்பதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்
