
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய புனிதக் கதவைத் திறக்கிறார் திருத்தந்தை – ANSA
பொதுவாக, கோடையின் கடும் வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், பெருமளவான சுற்றுலாப் பயணிகள் உரோம் நகருக்கு வருவதைத் தவிர்ப்பார்கள், ஆனால், இவ்வாண்டு இந்த மாதங்களில், திருப்பயணிகள் இவ்வளவு எண்ணிக்கையில் வந்திருப்பது, இரக்கம், அவர்களின் இதயத்தை எவ்வளவு தூரம் தொட்டுள்ளது என்பதையே காட்டுகின்றது என்று தெரிவித்தார் அருள்பணி சில்வா.
யூபிலி ஆண்டில், திருஅவையின் பணி, இரக்கம் என்பதை திருத்தந்தை நினைவுபடுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டிய அருள்பணி சில்வா அவர்கள், வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்கள் வழியாக திருத்தந்தை நமக்கு சிறப்பான எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
