இறையிரக்க யூபிலி ஆண்டு

எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! இறைத் தந்தையைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க எங்களுக்கு நீர் கற்பிக்கிறீர். உம்மைக் காண்பவர் அவரை காண்பதாகவும். நீர் கூறுகிறீர். உமது அன்பு பார்வை பணத்தின் அடிமைத்தனத்திலிருந்து. சக்கேயுவையும் மத்தேயுவையும் விடுவித்தது. படைக்கப்பட்ட பொருள்களில் மகிழ்ச்சியை தேடுவதிலிருந்து பாவியான பெண்ணையும் மகதலேனாவையும் காப்பாற்றியது, புனித பேதுருவை தனது பாவத்திற்காக அழச் செய்தது. மன்மாறிய கள்வனுக்கு விண்ணரசை வாக்களித்தது. உமது திருமுகத்தை எங்களுக்கும் காண்பியும். நாங்களும் மீட்படைவோம்.

கடவுளுடைய கொடை எது என்பதை நீர் அறிந்திருந்தால் என்று சமாறியப் பெண்ணுக்கு நீர் கூறிய வார்த்தைகளை எங்கள் ஒவ்வொருவருக்கும் கூறியதாக செவிமடுத்து கேட்போமாக! காணக் கிடைக்காத இறைத்தந்தையின் காணக்கூடிய திருமுகம் நீர். அந்த இறைவன், மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் வழியாக தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றார்.

ஆண்டவரே! உமது திருஅவை உயிர்த்து மாட்சியடைந்த ஆண்டவரின் திருமுகமாய் உலகில் திகழ்வதாக! அறியாமையிலும் தவற்றிலும் இருப்போர் மீது பரிவிரக்கம் கொள்வதாக! உமது திருப்பணியாளர்கள் வலுவின்மையால் போர்த்தப்படும்படி நீர் திருவுளமானீர். உமது திருப்பணியாளர்களை தேடிவரும் ஒவ்வொருவரையும் இறைவன் தேடி அன்பு செய்து மன்னிக்கிறார் என்பதை உணர்வார்களாக!

எங்கள் ஒவ்வொருவரிலும் உமது ஆவியை அனுப்பி புனிதப்படுத்தியருளும். இவ்வாறு இறையிரக்க யூபிலி ஆண்டு அருளின் ஆண்டாய் அமைவதாக! உமது திரு அவையும் புதுபிக்கப்பட்ட உற்சாகத்தோடு ஏழையருக்கு நற்செய்தியை கொணர்வதாக. சிறைப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் விடுதலையை முழுக்கமிடுவதாக! பார்வையற்றவர்க்கு பார்வையை பெற்று தருவதாக!

இந்த மன்றாட்டுக்களை இரக்கத்தின் தாயான மரியாவின் பரிந்துரையின் வழியாக இறைத் தந்தையோடும் தூய ஆவியோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்

—————————————————————————————————————-