(02/05/2019) Tooting St Boniface தேவாலயத்தில் கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினமன்று இலங்கையில் நடைபெற்ற அனர்த்தத்தினால் மாண்டு போன காயப்பட்ட மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கக் கூடிய ஒவ்வொருவருக்காகவும் இறை இரக்கம் வேண்டித் திருப்பலிப் பூசை ஒப்புக் கொடுக்கப்படுகிறது. இத்திருப்பலியானது மும் மொழிகளில், தமிழ் ஆங்கிலம் மற்றும் சிங்களம், ஒப்புக் கொடுக்கப்படுகிறது. இந்தத் திருப்பலியின் போது மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது. இயலுமானவர்களை மலர்கள் கொண்டு வருமாறு அன்புடன் கேட்டு நிற்கிறோம்.
திருப்பலி மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இன, மொழி மற்றும் கலாச்சாரம் சம்பந்தமாக எமக்கு இருக்கக் கூடிய தனிப்பட்ட எமது பார்வைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எமது கிறிஸ்தவ கத்தோலிக்க வாழ்வின் விழுமியங்களுக்கு சான்று பகரும் வகையில்
அனைவரையும் ஒரே குடும்பமாக ஒருமித்து மன்றாட அழைத்து நிற்கின்றோம்.
தயவு செய்து இவ் அறிவித்தலை உங்களது உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி…
Dears,
As you all know the savage killings of Easter Sunday in Sri Lanka, we need to pray for our people and our country. Uniting with the affected as we are showing our solidarity, we gather as Sri lankan catholic community to pray to our Lord. A joint adoration and requiem mass by the Tamil and Singala chaplaincies is arranged on 2nd of May, Thursday
At St. Boniface Church
185 Mitcham Road, London SW17 9PG
At 19.30
Kindly be present and inform others
Kindly bring flowers and candles for tribute
Fr Elmo
Chaplain
