மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக ஜே.எச். ஜே.எச்.இரத்தினராஜா திருத்தந்தையால் பிரகடனம் செய்யப்பட்ட இறை இரக்கஆண்டின்நினைவுச்சின்னமாகமட்டக்களப்புமறைமாவட்டமானதுபுதியஇறைஇரக்கதிருத்தலமொன்றினைமறைமாவட்டத்தில்அமைக்ககடந்தமறைமாவட்டமேய்ப்புப்பணிச்சபைஅமர்வில் தீர்மானித்தது. இதற்கிணங்க 19.03.2016 அன்றுசத்துருக்கொண்டான் என்னுமிடத்தில் மறைமாவட்டத்திற்குசொந்தமானகாணியில்மறைமாவட்டஆயர் பேரருட்தந்தைகலாநிதிஜோசப் பொன்னையா ஆண்டகைஅவர்களால் திருத்தலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது இந்நிகழ்வில் குரு முதல்வர் அருட்தந்தை.ஏ.தேவதாசன்,நிதிப்பொறுப்பாளர் அருட் தந்தை. இக்னேஸ் ஜோசப் மற்றும் குருக்கள், அருட்சகோதரசகோதரிகள் இறைமக்கள் அநேகர் கலந்துகொண்டனர். அதேவேளைஓய்வுபெறும் குருக்கள் தங்குவதற்கான குருமனைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.குருமனையும்,திருத்தலமும்இவ்வாண்டில் நிறைவு பெற்று திறந்து வைக்கப்படு மெனவும் ஆயர் தெரிவித்தார்.
Category Archives: தாயக திருச்சபை செய்திகள்
திருகோணமலை, நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற அருட்தந்தை, கடலில் மூழ்கி திங்கட்கிழமை (29/02/2016) இரவு உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், லியோ மார்ங்கா ஆச்சிரமத்தின் இயக்குனரான பண்டாரவளை – இல. 121/01 புனித தோமையார் வீதியைச் சேர்ந்த அருட்தந்தை சந்தியாப் பிள்ளை கீத பொன்கலன் (69 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம், திருகோணமலை பொதுவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அருட்தந்தையின் […]
