வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய மக்களுக்கு உதவுமாறு திருத்தந்தை வேண்டுகோள் சன.23,2012. இந்தோனேசியாவில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தனது செபத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.தலைநகர் ஜகார்த்தாவில், பெரும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம், பொருள்சேதம் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்திருப்பது குறித்த செய்திகளை மிகுந்த கவலையோடு கேட்டு வருவதாக, இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறிய திருத்தந்தை, பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களில் யாரும் கைவிடப்படா தவாறு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு […]
Category Archives: புதிய செய்திகள்
சன.24,2013. 47வது உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி டிஜிட்டல் வழி தொடர்புகள் பெருகியுள்ள இக்காலத்தில், அத்தொடர்புகள் வழியாக நமது எண்ணங்களைப் பகிர்ந்து, நாம் உருவாக்கும் உறவுகளையும், சமுதாயக் குடும்பத்தையும் எண்ணிப்பார்க்க விழைகிறேன் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.இவ்வாண்டு மேமாதம் 12ம் தேதி கொண்டாடப்படும் 47வது உலகத் தொடர்பு நாளுக்கென, “சமுதாய வலைத்தளங்கள்: உண்மை மற்றும் நம்பிக்கையின் கதவுகளும், நற்செய்திப் பணியின் புதிய அரங்கங்களும்” என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியின் துவக்கத்தில் இவ்வாறு […]
